9 உள்ளூராட்சி சபைகளில் தனித்து களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியது தூய தேசத்திற்கான கட்சி
புத்தளம் மாநகர சபை, கல்பிட்டி பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை, புத்தளம் பிரதேச சபை ஆகியவற்றோடு சேர்த்து மேலும் 6 சபைகளுக்கு தேவையான கட்டுப்பணத்தை தூய தேசத்திற்கான கட்சி தலைவர் இஷாம் மரிக்கார் இன்று (10) செலுத்தினார்.
இதே நேரம் புத்தளம் மாவட்ட தேர்தல் ஆணையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பணமும் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களால் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments