Breaking News

கற்பிட்டியின் றஸான் கல்வியற் கல்லூரி வர்த்தக பிரிவு ஆசிரியர் கற்கை நெறி இறுதிப் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றுள்ளார்

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியில் மூன்று வருட  வர்த்தகமும் கணக்கீடும் பிரிவின் கற்பித்தல் கற்கை நெறியின் இறுதிப் பரீட்சையில் கற்பிட்டியைச் சேர்ந்த மொஹமட்  றியாஜ் மொஹமட்  றஸான் சிறப்பு சித்தியடைந்து கனிஷ்ட மற்றும் இடைநிலை பாடசாலைகளில் ஆசிரியராக நியமனம் பெற உள்ளார்.


இவரின் சிறப்பு சித்திக்கு பெறும் பங்காற்றிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் தனது உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.


இவர் கற்பிட்டி சின்னக்குடியிருப்பைச் சேர்ந்த எம்.எச்.எம் றியாஜ் மற்றும் டி.ஜே டிலானி மூந்து ஆகியோரின் மூத்த புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments