JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸாவை அடையாளம் காண உதவுங்கள்.

எம்.யூ.எம்.சனூன்

படத்தில் காணப்படும் ஊர், பெயர் அற்ற இந்த சகோதரர் புத்தளம் நகரில் வெள்ளிக்கிழமை (11) காலை வபாத்தாகியுள்ளார்.

புத்தளம் நகர வீதிகளில்,  வீழ்ச்செயார் சைக்கிளில் தொப்பி அணிந்து, வெள்ளை நிற அடந்த தாடியுடன் காணப்பட்டவர்.

சைக்கிளில், ஊதுபத்தி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தும் வந்தவர்.

அன்னாரின் ஜனாஸா, விசாரணைகள் மற்றும் சட்டப் பிரச்சினைகள் மற்றும் சரியான தகவல்கள் கிடைக்கும் வரை, குருநாகல் வைத்தியசாலை குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் யாரென தெரியாததால் புத்தளம் ஜனாஸா நலன் புரிச்சங்கத்தினர் இவரது ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முடியாமல் உள்ளனர்.

அவசரமாக தகவல்கள் தேவைப்படுவதால், இவரை அடையாளம் கண்டு கொண்ட உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊரவர்கள் தொடர்புகொள்ளவும்.

இவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகின்றது.

ஒரு ஜனாஸாவை சிறப்பாக நல்லடக்கம் செய்ய உதவுங்கள்.

தொடர்புகளுக்கு,

புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கம்

ரிஸ்வான் - 0766008953, 

ஆதிப் - 0778401400





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال