புத்தளம் ஆர்.ஜே.ட்ரான்ஸ்போர்ட் அணி சம்பியனாக தகுதி பெற்றது.
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் லெஜென்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட, அணிக்கு தலா 09 பேர்களை கொண்ட உதைபந்தாட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை (23) புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் விளையாட்டரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
08 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் ஆர்.ஜே. ட்ரான்ஸ்போர்ட், த்ரீ ஸ்டார்ஸ், மெட்ரிட் மற்றும் கல்பிட்டி பேர்ள்ஸ் ஆகிய 04 அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவாகின.
அரை இறுதி போட்டிகளில் ஆர்.ஜே. ட்ரான்ஸ்போர்ட் மற்றும் கல்பிட்டி பேர்ள்ஸ் ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.
பரபரப்பான இறுதிப்போட்டியில் ஆர்.ஜே.ட்ரான்ஸ்போர்ட் அணி 02 : 01 கோல்களினால் வெற்றி வாகை சூடியது.
தொடரின் சிறந்த வீரராக பேர்ள்ஸ் அணியின் ரிழ்வான் தெரிவானார். தொடரின் சிறந்த கோல் காப்பாளராக ஆர்.ஜே.ட்ரான்ஸ்போர்ட் அணியின் லுக்மான் தெரிவானார்.
புத்தளம் உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக் மற்றும் உதைப்பந்தாட்ட நடுவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.எம்.பஸ்ரின் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இதே வேளை புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபகரும், தலைவருமான முஹம்மது யமீன் இத்தொடரில் நடுவர்களாக கடமையாற்றியவர்களுக்கு மேலங்கிகளையும் வழங்கி வைத்தார்.
No comments