குருநாகல் - கொழும்பு வீதியில் விபத்து
உடப்பு க.மகாதேவன்
குருணாகல் - கொழும்பு வீதியில் நால்ல பிரதேசத்தில் (24) திகதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
No comments