சிறந்த மாணவர்கள், சிறந்த கல்வி, வளமான கட்டடம் மாணவ சமுதாயத்திற்கு இன்றியமையாதது - கலாநிதி பாத்திமா சலீம்
உடப்பு -க.மகாதேவன்
சிறந்த மாணவர்கள், சிறந்த கல்வி, வளமான கட்டடம் இது ஒரு பாடசாலை மாணவ சமுதாயத்திற்கு இன்றியமையாதது அதே போல மாணவர்கள் சந்தோஷமாக கல்வி கற்பது இன்று முக்கிய இடத்தைப் பெறுகின்றது” என்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தினுடைய சாயிதா நிதியத்தின் பணிப்பாளர்களின் ஒருவரான கலாநிதி பாத்திமா சலீம் தனதுரையில் குறிப்பிட்டார்.
ஆண்டிமுனையில் ஶ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பாடசாலையில் 40லட்சம் பெறுமதியான புதிய கட்டடம் ஒன்று ஞாயிறு (23) பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.கோகிலகாந்தன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சாயிதா நிதியத்தின் பணிப்பாளர்களின் ஒருவரான பாத்திமா சலீம் தொடர்ந்து உரையாற்றும் போது, எனது வாழ்க்கையிலேயே இன்று நீங்கள் தந்த வரவேற்பானது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகி உள்ளது. நாம் இந்த சயிதா என்ற நிறுவனத்தின் ஒரு உறுப்பினர் என்ற ரீதியில் இலங்கைக்கு வந்துள்ளேன். சயிதா என்ற நிறுவனத்தின் ஊடாகத்தான் இந்தக் கட்டடம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இலங்கையில் பிறந்தேன். ஆனால் படிப்பது வாழ்வது,பேராசிரியராக கலாநிதி பட்டம் பெற்றதும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலாகும். இந்த சயிதா என்ற நிறுவனத்தை எனது தகப்பனார் சலீம் என்பவர் தான் ஆரம்பித்து வைத்தார். எனது தகப்பன் சலீம், தாய் சயிதா இவர்களைச் சேர்த்துத்தான் பரிதா என்ற குடும்பப் பெயரை வைத்துத்தான் சயிதா என்ற பெயரை இந்த அமைப்புக்கு வைத்துக் கொண்டோம். அரபு மொழியில் சயிதா என்றால் சந்தோஷமாகும். இந்த சயிதா அமைப்பின் உதவித்திட்டம் கல்வி, சுகாதாரம், நோய்வாய் பட்டவர்கள் போன்ற பல்வேறு கல்விக்காகவே எனது இந்த சயிதா அமைப்பு முற்று முழுதாக சேவை செய்து வருகின்றது. சயிதா அமைப்பின் முதன் முதல் முக்கிய நோக்கம் இந்த நாட்டில் கல்வியை மேம்படுத்துவதாகும். இந்த நிறுவனம் அரச பாடசாலைகளுக்கு இவ்வாறான நிதி உதவியைச் செய்வது இலாப நோக்கத்துகாக அல்ல. இது ஒரு சமூக சேவைக்காகவே செய்யப்பட்டு வருகின்றது. இந்த சயிதா அமைப்பின் முதல் நோக்கம் இனம், மதம், நிறம் என்ற பகுதிக்கு அப்பால் சென்று தாங்கள் கல்வியை மேம்படுத்துவதற்காகவே நாங்கள் அரச பாடசாலைகளில் கஷ்டப்பட்ட பாடசாலைகளைத் தெரிவு செய்து, அபிவிருத்தி செய்து வருகின்றோம். இலங்கையில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக நௌசர் பௌஸி அவர்கள் எங்களின் உறவு முறை இதை முன்னெடுத்துச் செல்கின்றார். இந்தத் திட்டத்தை அமுல் படுத்துவதற்காக எங்களுக்கு உதவி செய்த இந்தப் பிரதேச வலயக்கல்விப் பணிமனைகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நான் மிகவும் நன்றி உடையவனாக இருக்கின்றேன். பெற்றோர்களைக் கண்டேன். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் பாடசாலைக்காக முன்னின்று செயற்பட்டதை நான் பாராட்டுகின்றேன். அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.
எதிர் காலத்தில் உங்கள் பிள்ளைகளை சிறந்ததோர் கல்விமான்களாக உருவாக்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். அதே போல சிறந்த டிஜிட்டல் திட்டங்களை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதே போல விஞ்ஞான ரீதியாகவும் சிறந்த மாணவர்களை உருவாக்கவும் எமது இந்த சேவை உங்களுக்கு வழி வகுத்துள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து முன்னெடுத்த இந்த சேவைக்கு நான் உங்களுக்கு நன்றிக் கடமைப்பட்டுள்ளேன்.அதே போல அதிபர்,பெற்றார், பழைய மாணவர், நலன் விரும்பிகள் யாவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.
No comments