கற்பிட்டி, கரம்பையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும்
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கற்பிட்டி , கரம்பையில் கொடியேற்ற நிகழ்வும் சிரமதான வேலைத்திட்டமும் செவ்வாய்க்கிழமை (04) காலை 09:30 மணியளவில் கரம்பை கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில், கிராம அலுவலர் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கரம்பை சமூக பாதுகாப்பு குழு அமைப்பினரும் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments