புத்தளம்- சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற 77ஆவது சுதந்திர தின நிகழ்வும் சிரமதான பணியும்
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
புத்தளம் சமீரகம முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தின விழா பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் அஷ்-ஷெய்க் எம் எம் எம் மிஹ்லார் (நளீமி) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் கௌரவ அதிதிகளாக உதவி அதிபர் எஸ் எல் எம் ஜெனிஸ், பகுதித் தலைவர் எஸ்.எம்.எல்.எம் இஹ்ஜாஸ்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், சமீரகம ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக சமீரகம அல் இர்பானிய்யா பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் இணைந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய சமீரகம முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் ;இலங்கை எவ்வாறு சுதந்திரம் அடைந்தது என்பது பற்றியும், தற்போது நாட்டில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம், அதன் நோக்கம் பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சமீரகம பாடசாலையினுடைய வளாகம் மற்றும் இர்பானியா பாலர் பாடசாலையினுடைய வளாகம் என்பன பெற்றோர்களாலும் மாணவர்களாலும் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments