பிரித்தானியர் தொடர்ந்து இலங்கையை ஆட்சி செய்திருந்தால் ?
பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததாக பெருமையாக பேசுக்கொண்டு அதனை கொண்டாடுகிறோம். அதேநேரம் முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்றும், முக்கிய பதவிகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் புலம்புகிறோம்.
சுதந்திரத்திற்கு பின்பு இந்த நாட்டை ஆட்சி செய்தவர்களினால் இனவாத சிந்தனையை விதைத்ததை தவிர வேறு எவ்வாறான முன்னேற்றத்தினை அடைந்துள்ளோம் ?
பிரித்தானியர் எமது நாட்டை ஆட்சி செய்யாமல் இருந்திருந்தால் இன்று இருப்பதையும்விட மோசமான பொருளாதார நிலைமை இருந்திருக்கும்.
தற்போது எமது நாட்டில் இருக்கின்ற உட்கட்டமைப்பு வசதிகள், ரயில் பாதைகள் மற்றும் போக்குவரத்து, நிருவாக முறைமை உட்பட அனைத்தும் பிரித்தானியர்களினால் உருவாக்கப்பட்டது.
1815 இல் கண்டி ராஜ்யத்தை கைப்பற்றிய பின்பு, இன்று எமது நாட்டுக்கு நிரந்தர ஏற்றுமதி வருமானங்களை பெற்றுத் தருகின்ற தேயிலை உட்பட பெருந்தோட்ட பயிர்கள் பிரித்தானியர்களினால் உருவாக்கப்பட்டதுடன், அதன் தோட்ட வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து மலையாக தமிழர்கள் கொண்டுவரப்பட்டனர்.
பிரித்தானியர்களின் ஆட்சியில் சிறுபான்மையினர்களுக்கு மதிப்பு இருந்தது. அது 1948 க்கு பின்பு ஆட்சியாளர்களிடம் கையேந்தும் நிலையை உருவாக்கியது. இன்னும் ஐம்பது வருடங்கள் பிரித்தானியர் இந்த நாட்டை ஆட்சி செய்திருந்தால் இந்த நாடு முன்னேற்றம் அடைந்திருக்கும் என்பதனை நன்றாக சிந்திப்பவர்களுக்கு புரியும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments