ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்தில் இடம்பெற்ற 77வது சுதந்திர தின நிகழ்வு.
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்தில் இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வு அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஆசிரியர் ஸன்ஹீர், புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் நஜீம், இமாரா நிறுவனத்தின் பணிப்பாளர் ரின்ஷாத் ( பொறியியலாளர்), புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஆசாத், முன்னாள் நகர சபை உறுப்பினர் அஸ்கின், முஹாஜிரீன் மத்ரஸாவின் அதிபர் அஷ்ஷேக் முஸாதிக் முப்தி, YMMA City Boys அமைப்பின் தலைவர் பயாஸ், நகர சபை வேலைப் பிரிவு ( Works Unit) துபைல் ஆகியோருடன் அ.இ.ஜ.உலமா புத்தளம் நகரக் கிளையின் உப தலைவர் அஷ்ஷேக் அல்காரி ரியாஸ் தேவ்பந்தி செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானி பொருளாளர் அஷ்ஷேக் ஜம்சித் ரஷாதி உறுப்பினர்கள் அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி அஷ்ஷேக் ஹஸ்பான் ஸாபிதி அஷ்ஷேக் ஸனூஸ் அஷ்ரபி அஷ்ஷேக் நஸ்பான் இஹ்யாயி ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ரஷாதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments