பள்ளிவாசல்துறை தாருல் ஹில்மா அஹதிய்யாவின் சுதந்திர தின நிகழ்வு
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ். புத்தளம் நிருபர் சனூன்)
இலங்கையில் 77ஆவது சுதந்திர தினத்தை சிறப்பான வகையில் நினைவு கூர்ந்து பள்ளிவாசல்துறை தாருல் ஹில்மா அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடம் முகைதீன் ஜும்மா மஸ்ஜித், பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம், அல்- கரம் முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை மற்றும் பள்ளிவாசல்துறை மீடியா ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிறப்பான வகையில் மஸ்ஜித் முற்ற வெளியில் தாருல் ஹில்மா அஹதிய்யா பாடசாலை அதிபர் அஷ்ஷைக் எஸ் என்.எம் நலீம் (ரஹ்மானி) தலைமையில் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் விஷேட பிரமுகர்களாக பள்ளிவாசல் துறை முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் எம்.ஏ.எம் றிஸ்கான், அல் - கரம் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஆர்.எம் இர்பான் , பள்ளிவாசல்துறை கிராம சேவகர் திருமதி.எப்.இஸட் றினோஸா, முகைதீன் ஜும்மா மஸ்ஜித் தலைவர் எம்.பீ ஹலீல் றஹ்மான், புத்தளம் மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் எம்.எப் எம் றியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் விசேட பேச்சாளராக அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம் இர்பாக் (நளீமி) கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
இதில் பள்ளிவாசல்துறை தாருல் ஹில்மா அஹதிய்யா பாடசாலை மாணவர்கள், பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகாவித்தியாலயம் , அல்- கரம் முஸ்லிம் வித்யாலயம் என்பவற்றின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தாக பள்ளிவாசல்துறை தாருல் ஹில்மா ஆஹதிய்யா போதனா பீடத் தலைவர் எம்.பீ எம் நசீம் (காஸிமி) தெரிவித்தார்.
No comments