மூதூர் குடிசார் ஒன்றிய துணைக் குழுக்களுக்கான செயலமர்வு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
மூதூர் குடிசார் ஒன்றியம் (Muthur Civil Forum - MCF) இன் துணைக்குழுக்களுக்கான செயலமர்வு மூதூர் கலாசார மண்டபத்தில் எம்.சீ.எப் இன் அழைப்பாளர் மொஹமட் புஹாரி தலைமையில் நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலக பிரிவில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் உருவாக்கப்பட்ட துணைக் குழுக்களுடனான கலந்துரையாடல் மற்றும் திட்டமிடல் என்பன தொடர்பாக நெறிப்படுத்தப்பட்டது. அத்தோடு ஒன்பது துணைக்குழுக்கள் தமது அறிக்கைகளையும் சமர்ப்பித்ததுடன் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.
மேற்படி செயலமர்வின் விரிவுரையாளராக வலயக் கல்வி பணிப்பாளர் ஜவாத் ( நளிமி) கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments