கற்பிட்டி மஹ்தி பவுண்டேஷனின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி மஹ்தி பவுண்டேஷனின் கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி நகரில் இனம் காணப்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக இடம்பெறும் நான்காவது நிகழ்வு கற்பிட்டி தேத்தாவாடி கிராமத்தில் தக்கிய்யா பள்ளிவாசலில் தலைவர் எச்.எம் சிபான் தலைமையில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மஹ்தி பவுண்டேஷன் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில், தில்லையூர் மீனவ சங்கத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான சபுறுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனமை குறிப்பிடத்தக்கது.
No comments