Breaking News

புத்தளம் விம்பிள்டன் அரை இறுதிக்கு தெரிவானது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் உதைபந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் லெஜன்ட்ஸ் கழக அனுசரணையுடன் புத்தளத்தில் இடம் பெற்று வரும் நொக் அவுட் தொடரின் மூன்றாவது காலிறுதி  போட்டியில் விம்பிள்டன் கழகம் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தெரிவானது.


இதனோடு போட்டியிட்ட லிவர்பூல் அணி பெனால்டி உதையில் தோல்வியை தழுவியதோடு தொடரிலிருந்து வெளியேறியது.


இந்த பரபரப்பான கால் இறுதி போட்டி புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்றது.


நடைபெற்ற விறு விறுவிறுப்பான போட்டியில் இரு அணிகளும் கோல் செலுத்த எத்தனித்த போதிலும் கோல் போட முடியாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்ததால் வெற்றியை தீர்மானிக்க நடைபெற்ற பெனால்டி உதையில் 03 : 01 என்ற கோல் கணக்கில் விம்பிள்டன் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை தனதாக்கிக்கொண்டது.


பல போட்டி தொடர்களில் தொடர் சம்பியனாக மகுடம் சூடிய லிவர்பூல் அணியானது இந்த பெனால்டி உதையில் 

விம்பிள்டன் அணியின் கோல் காப்பாளர் முஹம்மது இம்ரானின் அபார கோல் தடுப்புகளால் தோல்வியுற்ற நிலையில் இம்முறை போட்டித்தொடரில் கடைசி கட்ட போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் தோல்வியுடன் வெளியேறியது.


லிவர்பூல் அணியானது சுமார் மூன்று வருட காலங்களுக்கு பிறகு புத்தளம் லீக் போட்டி தொடரிலிருந்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .



No comments