சித்திர போட்டியில் புத்தளம் வலயத்தில் கட்டைக்காடு றோ.க.த.ம வித்தியாலயம் சாதனை
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சித்திர போட்டியில் புத்தளம் வலயத்தில் தமிழ் மொழி மூலம் கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
புத்தளம் வலயத்தின் தெற்கு கோட்டத்தில் காணப்படும் கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 07 ல் கல்வி பயிலும் மாணவி சீ.அபிராமி மற்றும் தரம்13 ல் கல்வி பயிலும் வீ.தமயந்தி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி ஊக்கப்படுத்திய ஆசிரியர் எம் எப்.எப் முஷ்பிரா மற்றும் மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தமது பாடசாலையின் நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அதிபர் எப்.ஆர்.எச்.எஸ் தேவகுமாரி குறிப்பிட்டுள்ளார்.
No comments