ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
(உடப்பு க.மகாதேவன்)
ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (25) பாடசாலையின் அதிபர் திரு.ந.பத்மானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 2023,2024 வருடத்தில் பாட ரீதியாகவும் மற்றும் தவணைப் பரீட்சையில் கூடுதலான புள்ளிகளைப் பெற்று முதலாம்,இரண்டாம மற்றும்,மூன்றாம் இடங்களை தரங்கள் அடிப்படையில் பெற்ற மாணவர்களுக்கு பணப் பரிசில்களும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.எச்.எம். அர்ஜூன கலந்து சிறப்பித்ததுடன், தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.எம்.கமலேந்திரன், இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர், பாடசாலை அதிபர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மாணவர்களுக்கான பரிசில்களை வழங்குவதற்கான அனுசரணையை ஜெர்மன் நாட்டில் வசிக்கும் திரு.வி.கந்தசாமி மற்றும் லண்டனில் வசிக்கும் திரு.கா.அகிலநாதன் ஆகியோர் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments