Breaking News

மதுரங்குளி மீடியாவின் பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் - 2025

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

மதுரங்குளி மீடியாவின் ஏற்பாட்டில் கடந்த ரமழான் மாதத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவும் , புலமையாளர்கள் மற்றும் ஆளுமைகள் கௌரவிப்பும்  எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு   நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் முன்னாள் அதிபர் ஓய்வு பெற்ற என்.எம்.எம். நஜீப் தலைமையில் மதுரங்குளி ட்ரீம் செடண்ரில் இடம்பெறவுள்ளது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம் பைசர் மரைக்காரின் அழைப்பின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து சிறப்பிக்க உள்ளார்.


இவ்விழாவில் கடந்த ரமழான் மாதத்தில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி அதிகூடிய புள்ளிகளைப் பெற்று  வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களில் அன்றைய தினம் குளுக்கள் முறையில் அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு பணப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.


இதேவேளை 2023, 2024 ஆண்டுகளில் தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பதக்கம் அணிவித்து, நினைவுச் சின்னம்  வழங்கி கௌரவிக்கப்படுவதுடன், விஷேட கௌரவிப்பாக ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர்களான என்.எம்.எம். நஜீப், எம்.எச்.எம். றாசிக், ஏ. சீ. நஜிமுதீன் ஆகியோருடன் புத்தளம் சிரேஷ்ட ஊடகவியலாளரும், சமூகசேவையாளருமான எம்.யூ.எம். சனூன் ஆகியோர் கௌரவிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







No comments