Breaking News

கிளீன் ஸ்ரீலங்கா செயற்பணியினால் சுத்தமானது புத்தளம் சிறுகடல் கரை பகுதி.

எம்.யூ.எம்.சனூன்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களது எண்ணக்கருவில் உதயமான கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் கடற்கரை சுற்று சூழலை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (23) காலை புத்தளம் கடற்கரை எங்கும் இடம்பெற்றது.


புத்தளம் பிரதேச செயலகம் இந்த கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. 


617/ஈ பெரிய பள்ளி குடியிருப்பு, 617 புத்தளம் வடக்கு, 617/எப் புத்தளம் புதுக்குடியிருப்பு, 617/ஏ முள்ளிபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நான்கு பிரிவுகளினதும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகளின் நெறிப்படுத்தலின் கீழ் இந்த கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் புத்தளம் சிறுகடல் கரையோரத்தை சுத்தப்படுத்தும் சிரமதானம் வெற்றிகரமாக நடைபெற்றது.


இச்சிரமதானத்தில் புத்தளம் நகர சபை ஊழியர்கள், மகளிர் அமைப்புக்கள், மீனவர் சங்கங்கள், சிறுவர் கழகங்கள், இளைஞர் கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் வட்டாரச் சபை அங்கத்தவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 


சிரமதானத்தில் கலந்து கொண்டோருக்கான சிற்றுணவு மற்றும் மென்பானம் ஆகியவற்றை புத்தளம் முஹைதீன் ஜும்மா மஸ்ஜிதினால் வழங்கப்பட்டது.


மேலும், இலங்கை கடற்படை, புத்தளம் பொலிஸ் நிலையம், புத்தளம் பிரதேச செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் ISRC தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





















No comments