லுக்மானுல் ஹகீம் அரபுக் கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா
(புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு என். எம். ஹபீல் (கபூரி,JP)
புத்தளம் மாவட்டம் புளிச்சாக்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள லுக்மானுல் ஹகீம் அரபுக் கல்லூரியில் 2024 ம் வருடங்களில் தமது கல்வி ஆண்டினை பூர்த்தி செய்து உலமாக்களாக பட்டம் பெற்ற 04 ஆலிம்களுக்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் துஆ மஜ்லிஸ் வைபவம் கல்லூரி வளாகத்தில் அரபுக் கல்லூரியில் அதிபர் அஷ்ஷெய்க் எம்.யூ.எம் இர்ஷாத் (ரஷாதி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
இவ் வைபவத்தின் பிரதம அதிதிகளாக அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் அல்ஆலிம் ஷாபி (ரஷாதி) (சிரேஷ்ட விரிவுரையாளர் அர்ரஷாதிய்யா அரபுக்கல்லூரி) அவர்களும் சிறப்புரை நிகழ்த்துவதற்காக அஷ்ஷேக் ஆஷிக் அபுல் ஹஸன் (ரஷாதி)(சிரேஷ்ட விரிவுரையாளர் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி- மாதம்பிட்டி ஊடகக் குழு உறுப்பினர் ஜம்இய்யதுல் உலமா) அவர்களும் மற்றும் உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், கல்லூரி நிர்வாகிகள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இவ்வருடம் மார்க்க கல்வியை பூர்த்தி செய்து 2024 ம் கல்வி ஆண்டில் பட்டம் பெறும் உலமாக்கள்
1) அல்ஹாபிழ் அல் ஆலிம் எம்.எம். மாஹிர் (லுக்மானி) அக்கரவெளி
2) அல்ஹாபிழ் அல் ஆலிம் எஸ்.எம். சஸ்னி (லுக்மானி) தாராக்குடிவில்லு
3) அல்ஹாபிழ் அல் ஆலிம் எம்.என்.இப்லால் (லுக்மானி) புளிச்சாக்குளம்
4) அல் ஆலிம் எஸ்.எம். அப்ராஸ் (லுக்மானி) கீரியங்கள்ளி
No comments