Breaking News

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கற்பிட்டி கண்டக்குளி குடா கடற்கரை தூய்மைப் படுத்தல்

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

ஆரோக்கியமான நாடு அழகான வாழ்க்கை உள்ளடக்கிய கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் உல்லாசத்துறையை மேம்படுத்தும் வகையில் அழகான கடற்கரை எனும் கருப்பொருளில் கற்பிட்டி உதவி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் கண்டக்குளி குடா கடற்கரையை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் கிராம உத்தியோகத்தர் எம்.பீ.எம் அர்ஷத் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றது 


இதில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ் நிஸ்வர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.டீ.எம் தாஸ் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எச் ஹுஸ்னி, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர், முப்படையினர் மற்றும் கண்ட்குளி குடா பிரதேசவாசிகள் என சகல தரப்பினரும் கலந்து கொண்ட னர்.


இன்றைய தினம் கற்பிட்டி பிரதேச செயலகத்நின் சகல கிராம சேவையாளர் பிரிவுகளிலும் மேற்படி கிளீன் ஸ்ரீலங்கா வேலைததிட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.










No comments