மர்ஹூம் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் நினைவு நிகழ்வு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காலஞ்சென்ற காசிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் நினைவு நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (23) 4.30 மணி தொடக்கம் 6.00 மணிவரை புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரியில் இடம்பெற உள்ளது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments