அகில இலங்கை ஐக்கிய மக்கள் கட்சியின் ஏழாவது மாநாடும் தேசிய சமாதான நீதிபதிகள் சபையின் அங்குரார்ப்பண நிகழ்வும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தேசிய சமாதான நீதிபதிகள் சபையின் அங்குரார்ப்பண நிகழ்வும், கட்டமைப்பும், எதிர்காலத் திட்டமிடலும், நாளை 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் அட்டப்பள்ளம் ரிலாக்ஸ் கார்டன் என்னும் இடத்திலே காலை 8:30 மணி தொடக்கம் 1:00 மணி வரை இடம்பெறவிருக்கின்றது.
இந்த நிகழ்வுஅகில இலங்கை சமாதான நீதிபதிகள் சபையினுடைய ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளரும், அகில இலங்கை சமாதான நீதவானுமான ஏ.எல். அன்ஸாரின் வழிகாட்டலில், தலைமையில் இடம் பெறும்.
இதற்கு கல்முனை காதி நீதிவானும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பழீல் அன்ஸார் மௌலானா, சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதிபதியுமான நஸீர், சட்டத்தரணிகளான ரொஷான், அஸாம் உட்பட கல்விமான்கள், நாட்டில் பல பாகங்களில் இருந்து அநேகமான சமாதான நீதிவான்கள் இந்த நிகழ்லே கலந்து சிறப்பிக்கவிருக்கிறனர்.
எதிர்காலத்தில் சமாதான நீதவான்களுக்கு அரசு மூலம் பல சலுகைகளை, கௌரவங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கமாகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் சமாதான நீதவான்களுக்கான தலைமைத்துவம் மற்றும் ஊடகம் சமாதான நீதவான்களுடைய கடமை தொடர்பாக செயலமர்வும் இடம் பெறவிருக்கின்றது.
இந்த நிகழ்விலே கலந்து கொள்கின்ற அனைத்து சமாதான நீதவான்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது.
எதிர்காலத்திலே நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து தேசிய சமாதான நீதவான் அமைப்பிலே அங்கத்துவம் வகிக்கும் 100 சமாதான நீதிபதிகளுடைய அறிமுகம் தாங்கி வருகின்ற நூல் முதற்கட்டமாக நோன்புப் பெருநாளின் பின்னர் மிக பிரம்மாண்டமான முறையிலே வெளியீடு செய்யப்பட இருக்கிறது.
தேசிய சமாதான சபையில் இருக்கின்ற அனைத்து சமாதான நீதிபதிகளும் "சமாதானத்திற்காக உழைக்கும் கரங்கள்" என்னும் மகுடத்தின் கீழ் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
அதேவேளை, நாளை நிந்தவூர், அட்டப்பள்ளம் ரிலாக்ஸ் கார்டனில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை அகில இலங்கை ஐக்கிய மக்கள் கட்சியினுடைய ஏழாவது மாநாடும் இடம் பெறவுள்ளது.
இதில் நாட்டில் பல பாகங்களில் இருந்து கட்சித் தொண்டர்கள், அபிமானிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.
கட்சியின் ஏற்பாட்டிலே தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபரணங்களும் கட்சி நடத்திய முன் பள்ளிகளுக்கிடையிலான சித்திரப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுடைய கௌரவவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும்.
இந்த நிகழ்வுக்கு கல்வியலாளர்கள், இளம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சட்டத்தரணிகள் என பலரும் இதிலே கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
No comments