புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புலமையாளர்கள் கௌரவிப்பு!.
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மூன்று மாணவர்களான முஹம்மத் சிபான் அன்ஸிப் அஹமட் 147 புள்ளிகள், றபியுதீன் முஹம்மத் றிபாஹ் 144 புள்ளிகள், முஹம்மத் முபீன் சபியா 143 புள்ளிகள் உட்பட பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் இன்று (27) காலை ஆராதணையின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான புத்தகப் பொதிகள் சித்திபெற்ற மாணவர்களுக்கான புத்தகப் பொதிகளுடன், பணப்பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், உப அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம். இஸ்வான் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் எம். என். எம். நிப்ரான் உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இதேவேளை Fasha Distributor உரிமையாளரும் பழைய மாணவர் சங்க உறுப்பினருமான கே.எம்.எம். பைசர் மரிக்கார் Fasha Distributor சார்பில் அதிபர் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 2 தொடக்கம் 11 வரையா வகுப்புகளுக்கு 25க்கு மேற்பட்ட புதிய மாணவர்கள் வெளியூர்களிலிருந்து இம்முறை இணைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தெரிவித்தார்.
No comments