JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் கைவண்ணம் என்ற பெயரில் திறக்கப்பட்ட பெண்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)

‌புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் ஏற்பாட்டில் "கைவண்ணம்" என்ற பெயரில் புத்தளத்தில் பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனை நிலையம் கடந்த வெள்ளிக்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது 

‌முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியத்தின் (MWDT) நிறைவேற்று பணிப்பாளர் ஜூவைரியா  முஹைதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதிகயாக முதலீட்டு அபிருத்தி சபையின் பணிப்பாளர் மதூரி ஏக்கநாயக்க கலந்து கொண்டு மேற்படி விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அத்தோடு புத்தளம் உதவி பிரதேச செயலாளர், கற்பிட்டி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி அதிகாரி, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மகளீர் சங்கத்தின் தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் 

‌இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி (Australian Aid)  உதவியுடன் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியத்தின் (MWDT) ஊடாக முன்னெடுக்கப்படும் டெப் ( DAP) வேலைத் திட்டத்தின் வாயிலாக பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு  மேற்கொள்ளப்பட்ட சுயதொழில் பயிற்சியின் மூலம் பெண்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சிறந்ததொரு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த விற்பனை நிலையம்  அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال