JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் காற்பந்தாட்ட மத்தியத்தஸ்த்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.

எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் காற்பந்தாட்ட மத்தியத்தஸ்த்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் (24) புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


மத்தியஸ்த்தர் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.எம்.பஸ்ரின் தலைமையில் நடைபெற்ற இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில்  மத்தியஸ்த்தர் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.


புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் உயர் பீட உறுப்பினரும், சிரேஷ்ட காற்பந்தாட்ட நடுவரும், உடற்கல்வி போதனாசிரியருமான கலாநிதி எஸ்.ஆர்.எம்.ஆஸாத் இந்நிகழ்வுதனை நெறிப்படுத்தினார்.


எதிர்காலத்தில் மத்தியஸ்த்தர்  சங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.


பின்னர் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகக் குழுவினரும் தெரிவு செய்யப்பட்டார்கள். 


தலைவராக மீண்டும் எம்.ஏ.எம்.பஸ்ரினும், செயலாளராக புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் உயர்பீட உறுப்பினரும், சுற்றுப்போட்டி இணைப்பாளரும், போட்டி ஆணையாளருமான எம்.ஜெனூசனும், பொருளாளராக எம்.அம்ஜத்தும், உப தலைவராக எம்.ஓ.எம்.ஜாக்கிரும், உதவி செயலாளராக ஏ.ஏ.எம்.கியாஸும், நிர்வாக உறுப்பினர்களாக லீக் உயர் பீட உறுப்பினர் எஸ்.எம்.ஜிப்ரி மற்றும் எம்.ஜே.எம்.அஷ்ரப்தீன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال