புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் முதன் முறையாக நான்கு மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
தற்போது வெளியாகியுள்ள தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் - தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவர்களான அப்துல் வஹாப் மொஹமட் பதீ 144 புள்ளிகள், மொஹமட்ழ அசாம் அஸ்மா 143 புள்ளிகள் , அப்துல் ஜப்பார் முஆத் 141 புள்ளிகள், அஜ்மல் கான் அஹமட் 140 புள்ளிகள் என மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று முதன்முறையாக நான்கு மாணவர்கள் சித்தியடைந்து 41 வருட பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளதாகவும் அத்தோடு இவ் வருடம் முதன் முறையாக இப் பாடசாலையில் இருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்ற உள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம் எம் எம் மிஹ்ழார் (நளீமி) மேலும் தெரிவித்தார்.
அத்தோடு பாடசாலையில் இருந்து தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70 புள்ளிகளுக்கு மேல் 83.3 சதவீத சித்திகள் பெற்றுள்ளனர் எனவும் இம் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு அச்சாணியாக தரம் 03 தொடக்கம் கடமையாற்றிய ஆசிரியர் திருமதி எம்.ஆர் ஹஸ்னா பேகம் ஆகியோருக்கு அதிபர் பாடசாலை நிர்வாகம், அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
No comments