Breaking News

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் சித்தி

(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)

தற்போது வெளியாகியுள்ள தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் - தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் கனமூலை  முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களான  மொஹமட்  சிபான் அன்சிப் அஹமட்  147 புள்ளிகள், றபியுதீன் மொஹமட் றிபாஹ் 144 புள்ளிகள் , மொஹமட் முபீன் சபியா 143 புள்ளிகள் என மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் பீ. எம் முஸ்னி தெரிவித்தார்.


மேலும் பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70 புள்ளிகளுக்கு மேல்  69 சதவீத சித்திகள் பெற்றுள்ளனர். 


இம் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு அச்சாணியாக திகழ்ந்த ஆசிரியர்களையும் அதிபர் பாடசாலை நிர்வாகம், அபிவிருத்திக் குழு,  பழைய மாணவர்கள் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.





No comments

note