Breaking News

நுரைச்சோலை தேசிய பாடசாலையில் ஏற்படுத்தப்பட்ட Target D திட்டம் வெற்றி அடைந்துள்ளது.

(புத்தளம் நிருபர்.சனூன், கற்பிட்டி நிருபர் சியாஜ்)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்  வெளியாகிய நிலையில், நுரைச்சோலை தேசிய பாடசாலையிலிருந்து 08 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று இலக்கை அடைந்துள்ளனர்.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக குறித்த பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட "திட்டத்தின் நோக்கம் Target D" அதாவது கல்பிட்டி கோட்டத்தில் முதலாவது பாடசாலை என்ற இடம் பெறவேண்டும் என்ற இலக்கு வெற்றி அடைந்துள்ளதாக அதிபர் இம்ரான் கான் பெருமைப்பட தெரிவித்துள்ளார்.


சித்தி அடைந்த எட்டு 8 மாணவர்களுக்கும் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்குமான வரவேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) அதிபர் எம்.ஐ.எம். இம்ரான்  தலைமையில் நடைபெற்றது. 


இதில் மாணவர்கள் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி பாராட்டப்பட்டனர். 


இம்மாணவர்களின் வெற்றியில் பங்களிப்பு செய்த வகுப்பாசிரியர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கத்தின் வருகையும் நிகழ்வுக்கு மெருகூட்டியது.












No comments

note