புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் எட்டு மாணவர்கள் சித்தி
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
தற்போது வெளியாகியுள்ள தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் - தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் மாணவர்களான மொஹமட் றில்வான் றுகைய்யா 158 புள்ளிகள், மொஹமட் சப்ராஸ் சுஹைல் அஹமட் 147 புள்ளிகள், மொஹமட் மசூத் பாத்திமா மன்ஹா 147 புள்ளிகள், மொஹமட் சபீக் ஸாபீயா 146 புள்ளிகள் , மொஹமட் றஸாத் பாத்திமா றஹா 144 புள்ளிகள், மொஹமட் றியாத் பாத்திமா றிபா 142 புள்ளிகள், மொஹமட் ஜனூன் பாத்திமா அம்ரா 142 புள்ளிகள் , அப்துல் முனாப் முவீதா பானு 140 புள்ளிகள் என மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று எட்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம் எம் ஹுதைபா தெரிவித்தார்.
மேலும் பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 123 மாணவர்களில் 70 புள்ளிகளுக்கு மேல் 71 சதவீத சித்திகள் பெற்றுள்ளனர்.
இம் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு அச்சாணியாக திகழ்ந்த ஆசிரியர்களையும் அதிபர் பாடசாலை நிர்வாகம், அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
No comments