Breaking News

முந்தல் பொலிஸார் மற்றும் வர்த்தக சங்கம் ஆகியோருக்கிடையிலான முதலாவது கலந்துரையாடல்

தாரவில்லு சந்தி, புளிச்சாக்குளம் சந்தி, கீரியங்கள்ளிக்கிடையில் அமையப்பெற்ற கடை உரிமையாளர்களின் வர்த்தக சங்கக் கூட்டம் 2025 ஜனவரி மாதம் 19ம் திகதி புதுக்குடியிருப்பு கிளினிக் சென்டர் கட்டிடத்தில்  2025ம் ஆண்டின் முதலாவது கலந்துரையாடல் பொலிஸாருக்கும் கடை உரிமையாளர்களுக்குமிடையில் இடம்பெற்றது.


முந்தல் பொலிஸ் பொறுப்பதிகாரி  திரு.அசித்த லக்ருவான் அவர்களால் வர்த்தக  சங்கத்தின் பொறுப்புக்கள் என்ன, திருடர்களிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது, கடைகளின் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என பல அனுபவமிக்க விடயங்களை பகிர்ந்து கொண்டார். அத்தோடு முன்னெச்சரிக்கை செயற்பாடுகளாக உங்கள் வியாபார நிலையங்களில் முடியுமான வரை கண்கானிப்பு கெமராக்கள் பொறுத்துதல் கெமராக்கள் உள்ள இடங்களில் அதன் தொழில்நுட்ப செயற்பாடுகளை உறுதிப்படுத்தல், கடைகளுக்கு முன்னும் பின்னும் மின் குமிழ்களை போடுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கியதோடு  என்றும் நானும் எங்களுடைய பொலிஸ் அதிகாரிகளும் உங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம் என்பதையும் முன்வைத்தார்.


அத்தோடு சபையோர் முன்னிலையில் கலந்துரையாடல் நடைபெற்று இனிதே மாலை 5.00 மணியளவில் கூட்டம் முடிவுற்றது.



(புளிச்சாக்குளம் - புதுக்குடியிருப்பு)              வர்த்தக சங்க செயலாளர் ஹபீல் நிஜாமுதீன் (கபூரி,JP)











No comments

note