புத்தளம் ஸ்போர்ட்ஸ் அகடமியின் முதலாவது பரிசளிப்பு நிகழ்வு.
எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் ஸ்போர்ட்ஸ் அகடமியின் முதலாவது பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .
விளையாட்டு துறை ஆசிரியர் ஏ.ஜே.எம். இனூஸ் தலைமையில் மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் இஸட் .ஏ. ஸன்ஹீர் கலந்து கொண்டார்.
விஷேட பேச்சாளராக ஏ.ஓ.எம் ரிபாய், சிறப்பு விருந்தினராக புத்தளம் ஐ.சொப்ட் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.கே. அப்ராஸ் மற்றும் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் உதவி அதிபர் எம். எஸ்.எம்.ஹிஷாம், ஆசிரியர் ஏ.எச்.எம்.ஹசீப் மற்றும் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எம்.இஹ்திஷாம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
புத்தளம் ஸ்போர்ட்ஸ் அகடமியானது பாடசாலை மாணவர்கள் மத்தியில் உள்ளக விளையாட்டுகளை பயிற்றுவித்து மாணவர்களை தேசிய மட்டத்தில் மிளிர வைப்பதற்கான பெரும் பங்கினை ஆற்றி வருகின்றது.
குறிப்பாக செஸ் மற்றும் கிரபில் விளையாட்டுகளில் மாணவர்களை பயிற்றுவித்து பாடசாலை, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாணவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு வெற்றிகளை பெறுவதற்கு பயிற்சிகள் வழங்கி இருக்கிறது.
முக்கிய மைல் கல்லாக இந்த அகடமியின் நான்கு மாணவர்கள் சென்ற வருடம் நடைபெற்ற ஜப்னா இன்டர்நேஷனல் செஸ் போட்டியில் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது.
செஸ் மற்றும் ஸ்கிரபிள் விளையாட்டுக்களில் மாணவர்களிடம் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு அதிதிகளாக கலந்து கொண்டவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஜப்னா சர்வதேச செஸ் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அகாடமியின் செஸ் பயிற்றுவிப்பாளர் மென் பொறியியலாளர் எம்.ஜே.எம்.நஸீர், ஸ்கிரபிள் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ஏ.ஏ.எம். அஸ்ரின் மற்றும் ஏனைய அங்கத்தவர்களின் பங்கு பற்றுதலுடன் இந்த பரிசளிப்பு நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.
No comments