அரபு மொழித் தினத்தை முன்னிட்டு புத்தளம் தாருல் குர்ஆன் அரபுக் கல்லூரியில் நிகழ்வுகள்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் நகர கிளைக்கு உட்பட்ட 14 மத்ரஸா மாணவ மாணவிகளையும் சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு அரபு மொழியில் நிகழ்ச்சிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் புத்தளம் தாருல் குர்ஆன் அல் கரீம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் சௌக்கீ (பஹ்ஜீ) தலைமையில் மத்ரஸா மாணவர்கள் மத்ரஸா வளாகத்தில் அரபு மொழியில் மிக அழகான முறையில் கஸீதா, பேச்சு, மற்றும் உரையாடல் போன்ற நிகழ்வுகளை சிறப்பாக செய்து முடித்தனர்.
இந்நிகழ்வில் மத்ரஸா மாணவர்கள் மிக உற்சாகமாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முக்கியமான நிகழ்வாக புத்தளத்தில் சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும் மத்ரஸா நிர்வாகிகள் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தனர்.
இந்நிகழ்வில் புத்தளம் அப்துல் மஜீத் அகடமி பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் நாசர் (ரஹ்மானி), அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தலைவர்
அஷ்ஷெய்க் ஏ.பீ.ஜிப்னாஸ் (மிஸ்பாஹி), உப தலைவர் அஷ்ஷெய்க் ஸமீல் (பஹ்ஜீ) கல்லூரியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.நவவி, அப்துல் ஹஸீப் நைனா மரைக்கார், ரைய்யான் ட்ரவல்ஸ் உரிமையாளர் பஸரி ஹாஜியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments