Breaking News

உடப்பு புளிச்சாக்குளம் பிரதான காபட் பாதை முடியும் தருவாயில்

உடப்பு க.மகாதேவன்

உடப்பு புளிச்சாக்குளத்தை இணைக்கும் உறவுப் பாதையான காபட் வீதி இன்னும் குறிப்பிட்ட சில நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நடைபெற்று வரும் இந்த வேலைத்திட்டம் உடப்பு புளிச்சாக்குளம் மக்களின் ஒரு மைல் கல்லாகும். 


பல தசாப்த காலங்களாக இந்த வீதியை எந்த ஒரு அரசியல் வாதியும் கவனிக்காத நிலையில்  தாமாக உடப்பு புளிச்சாக்குளம் மக்களுக்காக முன் வந்து முன்னாள் புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ், மற்றும் அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவர் க.தெட்சணாமூர்த்தி ஆகியோர் அடிக்கல்லை நாட்டி ஆரம்பித்து வைத்தனர். இவர்களுக்கு இவ்வூர் மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.


மழை காலம் வரும் போது பயணம் செய்ய முடியாது  மக்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் இன்று அது ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதால் உடப்பு புளிச்சாக்குளம் மக்கள் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments

note