உடப்பு வம்பிவட்டானில் பாற்குட பவனி
(உடப்பு க.மகாதேவன்)
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு வம்பிவட்டான் பகுதியில் குடிகொண்டுள்ள ஶ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின் வருடாந்த நிகழ்வான பாற்குட பவனி (24) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டத்தில் முதன் முதலில் அமைக்கப்பட்ட இந்த ஆலயம் இன்று புகழ் பெற்று விளங்குகின்றது.
ஐயப்பன் மாலை அணிந்த சாமிமார்கள் உடப்பிலிருந்து பாற்குடம் சுமந்த வண்ணம் வம்பிவட்டான் ஆலயத்தை வந்தடைந்தனர்.இவர்கள் எதிர்வரும் சில தினங்களில் இந்தியாவிலுள்ள சபரிமலை ஐயப்பசுவாமி ஆலயத்தை அடைந்து, அங்கு தரிசனம் செய்து “ஜோதி பூஜை” கண்டவுடன் மீண்டும் இவர்கள் இலங்கையை வந்தடைவார்கள். பின்னர் அவர்களின் மாலை ஆலயத்தில் வைத்து பிரதம குருசாமி அவர்களினால் கழற்றப்படும். குருசாமி சின்னையாதாஸ் தலைமையில் இவர்கள் இந்தியா செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments