Breaking News

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த கலை திறமைகள் வெளிப்பாட்டு நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த  கலை திறமைகள் வெளிப்பாட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (22) பாடசாலையின் அதிபர்  ஜே. நிஸ்மத்துல் பாஹீமா தலைமையில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.


இந் நிகழ்வில் அதிதிகளாக கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் அதிபர் எஸ் எம் அருஸ், கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் எம் எம் எம் நவ்ப் ஆகியோருடன்  கற்பிட்டி நகரில் உள்ள ஏனைய பாலர் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சிறார்களின் கலை, திறமைகள், ஆற்றல்கள் என பல்வேறு வகையிலும் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணரும் நோக்கோடு  சிறுவர்களின் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் கடந்த 12 வருடங்களாக கற்பிட்டி ஜென்னதுல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலை  கலை, திறமைகளையும் வெளிப்பாட்டு நிகழ்வுகளையும் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது  


இந் நிகழ்வில் பங்குபற்றிய சகல மாணவர் சிறார்களுக்கும் பதக்கம் , சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவித்தமையும் சிறப்பம்சமாகும். அத்தோடு இந்நிகழ்வு சிறப்புற ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் என சகலருக்கும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அதிபர் ஜே.நிஸ்மத்துல் பாஹீமா தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.












No comments

note