புத்தளம் சுபியானி புதிய வானம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெரு எம்.எப்.சுபியானி, சிறந்த சமூக சேவையாளருக்கான "புதிய வானம்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2024ம் ஆண்டுக்கான "புதிய வானம்" விருது வழங்கும் விழா அண்மையில் களுத்துறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது சர்வதேச ரீதியில் நடைபெற்றதால் அனைத்துலக நாடுகளில் வாழும் ஆளுமை மிக்க தமிழ் உறவுகளுக்கு புதிய வானம் ஊடாக விருது வழங்கும் விழாவாக விமரிசையாக இடம்பெற்றது .
இதன் போதே புத்தளம் எம்.எப்.சுபியானியின் மகத்தான சமூக சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடளாவிய மற்றும் சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஆளுமைகளுக்கு "புதிய வானம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் விழாவில் ஆன்மீகவாதிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கலை, இலக்கிய படைப்பாளிகள், ஓவியர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வை புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளையும், கணபதி அறநெறி பாடசாலையும் இணைந்து மகத்தான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்நிகழ்விற்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து குறிப்பிட்ட சில ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
No comments