Breaking News

வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகள் டிசம்பர் 19 வரை நடைபெறும்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

காலநிலையில் ஏற்பட்ட  திடீர் மாற்றம் காரணமாக நவம்பர் 27, 28,29 மற்றும் டிசம்பர் 02  ஆகிய தினங்களில் விடுமுறை வழங்கப்பட்ட வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் மீண்டும் நடாத்தப்படும்.என வடமேல் மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.


2024 நவம்பர் 27 அன்று பாடசாலை நடாத்தப்பட்டிருப்பின், 2024 டிசம்பர்16, 17, 18 ஆகிய தினங்களில் மாத்திரம் பாடசாலை நடாத்தப்படும் எனவும் வடமேல் மாகாண கல்வித்திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.




No comments

note