JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் மலரும் மொட்டுகள் நிகழ்ச்சி பத்தாயிரம் பார்வையாளர்களையும் தாண்டி சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் மலரும் மொட்டுகள் எனும் முகநூல் நேரலை சிறுவர் நிகழ்ச்சி மூன்று நாட்கள் நிறைவில் பத்தாயிரம் பார்வையாளர்களையும் தாண்டி சாதனை படைத்துள்ளது.


கற்பிட்டி வரலாற்றில் முதன் முறையாக வாராந்த முகநூல் நேரலை நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மலரும் மொட்டுகள் சிறுவர் நிகழ்ச்சி சகல தரப்பினரையும் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இரு சிறுவர்கள் தமது திறமைகள் மற்றும் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வண்ணமாக கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேற்படி மலரும் மொட்டுகள் முகநூல் நேரலைநிகழ்ச்சியினை மன்றத்தின் பொருளாளர் கவிதாயினி ஏ.எச்.எப் பர்வின் தொகுத்து வழங்குவதுடன் நேரலையினை கற்பிட்டியின் முகநூல் ஊடகவியலாளர் றிஸ்வி ஹூசைன் மேற்கொள்வதுடன் நெறிப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மன்றத்தின் தலைவர் எஸ்.எம் அருஸ், உப தலைவர் எம்.எம்.எம் நவ்ப், செயலாளர் எம்.எச்.எம் சியாஜ் மற்றும் நிர்வாக உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் அஸ்கர், எஸ் சுப்ரமணியம் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال