Breaking News

தங்களது தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்ட ரணிலும், சஜிதும். இதைத்தான் விதி என்பதோ ?

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்தபோது முதலில் பொது தேர்தலை நடாத்தியிருந்தால், கணிசமான பாராளுமன்ற ஆசனங்களை அவரது கட்சி பெற்றிருக்கும். அதன்பின்பு ஜனாதிபதி தேர்தலை நடாத்தியிருந்தால், நாட்டின் அரசியல் சூழ்நிலை மாறியிருக்கும். 


அதாவது அவர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் பாராளுமனறத்தில் தவிர்க்கமுடியாத பலம்பொருந்திய சக்தியாக ரணில் இருந்திருப்பார். 


தற்போது NPP க்கு கிடைத்தது போன்று அதிகமான ஆசனங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. 


பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள விரும்பாத எம்பிக்கள் ரணிலுக்கு பிழையான ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம். 


அது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ரணிலையும், சஜிதையும் ஒன்றிணைக்கும் பலமான முயற்சி நடைபெற்றது. அதற்கு ரணில் உடன்பட்டார். ஆனால் அதற்கு உடன்பட சஜித் மறுத்துவிட்டார். 


ரணில், சஜித் ஆகிய இருவரும் இணைந்து ஜனாதிபதி தேர்தலை சந்தித்திருந்தால், இன்றைய அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறியிருக்கும்.   


எனவேதான் ரணிலுக்கு எவ்வளவுதான் அரசியல் அனுபவம் இருந்தாலும், ரணில் அன்று எடுத்த தீர்மானமானது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுபோலவே சஜித் பிரேமதாசாவின் தீர்மானமுமாகும்.  


இதைத்தான் கூறுவது விதி என்று. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments