புத்தளம் மாவட்டத்தில் 'மைக்;' சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் - கட்சியின் உபதலைவர் ஸப்வான் சல்மான் தெரிவிப்பு!
ரஸீன் ரஸ்மின்
நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநயாக குரல் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அக்கட்சியின் உபதலைவர் ஸப்வான் சல்மான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு குறுகிய காலத்திற்குள் ஐக்கிய ஜனநயாக குரல் கட்சி புத்தளம் மாவட்டத்தில் கால்பதித்து, கட்சி நடவடிக்கைகளை ஆரம்பித்தது. புத்தளத்தில் தனித்துவமான சிறந்த அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கும், ஊழல் அற்ற ஒரு அரசியல் கலாசாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற ஒரு கோஷத்துடன் நாம் கட்சி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
புத்தளம் மாவட்ட மக்களுக்கு எமது கட்சியும், சின்னமும் புதிதாக இருந்தாலும் ஊழல் செய்யாத, மிகவும் திறமையான, அரசியலுக்கு பழமையான வேட்பாளர்களை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தலைமையில் களமிறக்கியிந்தோம். எனினும், எமது கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
எமது கோரிக்கைகளை ஏற்று, எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த புத்தளம் மாவட்டத்தில் உள்ள மூவின மக்களுக்கும், தேர்தல் காலங்களில் எங்களோடு கைகோர்த்து இரவு – பகல் என்று பாராது தீவிரமாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், புத்தளத்தில் சிறந்த அரசியல் கலாசாரத்தையும், மக்களின் அபிலாஷைகளையும் பெற்றுக்கொடுக்க எமது கட்சி தொடர்ந்தும் களத்தில் இருக்கும் என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
No comments