Breaking News

புத்தளம் நகரை சேர்ந்த இளம் சமாதான நீதவான் எஸ்.எச்.எம்.அம்ஹர் இரு விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

ஸ்ரீ ராஜகீய அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற லக் உபகார விருது வழங்கும் நிகழ்வில் புத்தளம் நகரை சேர்ந்த இளம் சமாதான நீதவான் எஸ்.எச்.எம்.அம்ஹர் இரு விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளார்.


இந்த விருது வழங்கும் நிகழ்வு (16) அண்மையில் கொழும்பு என்.ஏ.டீ.ஏ.கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இதன் போது சமாதான நீதவான் எஸ்.எச்.எம்.அம்ஹர், ஸ்ரீ லங்காபிமானி கீர்த்தி ஸ்ரீ தேசமான்ய மற்றும் தேசபந்து விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளார்.


இவர் புத்தளம் நகரில் நீண்ட காலமாக சமாதான நீதவானாக சேவையாற்றிய சம்சுல் ஹுசைனின் புதல்வராவார்.





No comments

note