கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றம் முகநூல் மற்றும் யூடியூப் அலைவரிசைகளை உத்தியோபூர்வமாக ஆரம்பித்தது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடங்கள் நிறைவு பெறுவதையொட்டி மன்றத்தின் செயல்பாடுகளை மென்மேலும் மேம்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றம் அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் முகமாக தமிழ் கலை இலக்கிய மன்றம் என்ற பெயரில் முகநூல்
பக்கம் மற்றும் யூடியூப் அலைவரிசைகள் என்பனவற்றை ஞாயிற்றுக்கிழமை (17) அதன் தலைமைக் காரியாலயத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .
இந்நிகழ்வில் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் எஸ் எம் அரூஸ் உப தலைவர் எம்.எம்.எம் நவ்ப் செயலாளர் எம் எச் எம் சியாஜ் பொருளாளர் ஏ.எச்.எப் பர்வின் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் அஸ்கர், எஸ். சுப்ரமணியம் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றதுடன் நிகழ்வுகளை ஏ.ஆர்.எம் அஸ்கர் சிறப்பாக தொகுத்து வழங்கியதுடன் நிகழ்வுகள் யாவும் நேரலையாக கற்பிட்டியின் மூத்த முகநூல் ஊடகவியலாளரான றிஸ்வி ஹூசைனின் முகநூல் வாயிலாக நேரலை ஒலிபரப்பு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .
No comments