JobVibe.lk - Sri Lanka Job Portal

இரு ஆசிரியைகளால் தாக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு சம்பவம் வென்னப்புவ பாடசாலையில் இடம்பெற்றுள்ளது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இரு ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

 

இதன்படி, சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட 2 ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் 

 

வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வகுப்பு ஆசிரியை மற்றும் மற்றுமொரு ஆசிரியையினால் தாக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

 

வகுப்பறையை விட்டு வேறொரு மாணவியுடன் வெளியேறியமை தொடர்பில் அவர் இவ்வாறு தண்டிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. 

 

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களான ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுக் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

 

இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். 

 

இதையடுத்து, இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال