மாகாண மட்ட அரச கலை இலக்கிய விழாவில் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் பொருளாளர் பர்வினுக்கு பாடலாக்கம் போட்டியில் மூன்றாம் இடம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)
"வயம்ப விசுல மினி" மாகாண மட்ட அரச கலை விழாவின் பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (19) வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய தலைமையில் குருநாகல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் பொருளாளரும் , கிராம உத்தியோகத்தருமான கவிதாயினி ஏ.எச். எப் பர்வின் பாடலாக்கம் போட்டியில் பங்கு பற்றி மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார். இதற்காக இவருக்கு சான்றிதழ் மற்றும் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பாடலாக்கம் போட்டியில் கற்பிட்டி பிரதேச மட்டத்திலும் புத்தளம் மாவட்ட மட்டத்திலும் முதலாம் இடங்களை பெற்றுள்ள இவர். மொஹமட் நூர் இஸ்லாமின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments