கற்பிட்டியில் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன். புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (CTJ ) கற்பிட்டி கிளை 10வது தடவையாக மேற்கொள்ளும் மாபெரும் இரத்த தான முகாம் எதிர்வரும் 2024. 11. 24 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற உள்ளது.
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் என்ற மேற்படி நிகழ்வில் சகலரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி நிகழ்வு வெற்றி பெற உதவுமாறு ஏற்பாட்டு குழு வேண்டிக் கொள்கின்றது.
No comments