Breaking News

மதுரங்குளி - கனமூலை உம்மு பல்ழ் பெண்கள் அறபுக் கல்லூரியில் ஹிப்ழ் மற்றும் ஷரீஆப் பிரிவுக்கான புதிய மாணவிகள் அனுமதி - 2025

மதுரங்குளி - கனமூலையில் அமைந்துள்ள உம்முல் பழ்லு பெண்கள் அரபுக் கல்லூரியில் இன்ஷா அள்ளாஹ் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.


இக்கல்லூரி 12 வருடங்காலமாக அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்! 


இக்கல்லூரியில் 66 ஆலிமாக்கலும், 22 ஹாபிழாக்கலும் இதுவரையில் நல்லமுறையில் வெளியாகியுள்ளதை மிக மகிழ்ச்சியாக ஞாபக படுத்திக்கொள்கிறோம். இம்மத்ரஸாவில் ஆலிமா, ஹாபிழா மட்டுமில்லாமல் O/L, அஹதிய்யா மற்றும் கணனி, தையல் மற்றும் சமயல் போன்ற கைத்தொழில்களும் நடை பெற்றுக் கொண்டு அதற்கான திறமையான சான்றிதல்களும் கொடுக்கப்படவுள்ளது. எனவே இம்முறையும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2024 டிசம்பர் 1ஆம் திகதி ஞாயிறுக்கிழமை நேர்முக பரீட்சை நடைபெறவுள்ளது.


எனவே உங்களுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தில்  உள்ள பிள்ளைகள் ஊரில் உள்ள பிள்ளைகளை கல்லூரியில் இனைத்து அதன் மூலம் நல்லதொரு சிறந்த எதிர்காலத்தை உருக்குவாக்குவதற்க்கு முயற்சிப்போம். அல்லாஹ் எங்களை தீனுடைய சேவையில் இனைப்பானாக! ஆமீன்.


ஹிப்ழ் மற்றும் ஷரீஆப் பிரிவுக்கான புதிய மாணவிகள் அனுமதி - 2025


தகைமைகள்

=》அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.

=》ஆர்வமும் ஆரோக்கியமும் உள்ளவராக இருத்தல்

=》நல்லொழுக்கமுள்ளவராக இருத்தல் வேண்டும்.

=》ஹிப்ழ் பிரிவுக்கான வயதெல்லை 10- 13 வயது வரை.

=》ஷரீஆப் பிரிவுக்கான வயதெல்லை 14-16 வயது வரை.


அடைவுகள்

=》ஒழுக்கமுள்ள ஒரு மாணவி.

=》அல் -ஆலிமா சான்றிதல்.

=》அல்-ஹாபிழா சான்றிதல்.

=》க.போ.த (சா.த) பரீட்சை.

=》அஹதிய்யா பரீட்சை.

=》சிங்களம், ஆங்கிலம், உருது மொழிகள்.

=》கணனி கற்கை நெறி சான்றிதல்

=》தையல் கற்கை நெறி சான்றிதல்

=》கேக் கற்கை நெறி சான்றிதல்.


ஆவணங்கள்

=》பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (நகல்).

=》பாடசாலையின் தேர்ச்சி அறிக்கை.


குறிப்பு:-

=》அல்குர்ஆன் மத்ரஸா, அல்குர்ஆன் மனனப்பிரிவு பகல் 03:00 மணி முதல் மாலை 05:30 வரை பகுதி நேரமாகவும் நடைபெறுகிறது.


ஹிப்ளுப் பிரிவின் கற்கை நெறி காலம் 3 வருடங்கள், ஷரீஆப் பிரிவின் கற்கை நெறியின் காலம் 5 வருடங்கள்


மேலதிக விபரங்களுக்கு:-076 785 5498


நேர்முக பரீட்சை

2024-டிசம்பர்-01 (ஞாயிற்றுக் கிழமை) காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறும்.




No comments

note