தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புத்தளம் - புழுதிவயல் பைஸானா பைரூஸ் எழுதிய டுவென்டி ப்ளஸ் 20+ கவிதை நூல் வெளியீடு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் புழுதிவயல் பைஸானா பைரூஸ் எழுதிய டுவன்டி ப்ளஸ் 20+ முதல் கவிதை நூல் வெளியீடு தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை மாலை பல்கலைக்கழக ஒன்றுகூடல் மண்டபத்தில் கலை கலாசார பீடாதிபதி எம்.எம்.பாஷில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக துணைவேந்தர் யு.எல்.அப்துல் மஜீத் கலந்து கொண்டதோடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
இந் நிகழ்வின் போது நூலாசிரியரான பைஸானா பைரூஸ் இளம் கவிஞருக்கான விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
























No comments