JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஐ.எப்.எம்.முன்பள்ளி மாணவர்கள் புத்தளம் பொது நூலகம் மற்றும் சிறுவர் பூங்காவுக்கு விஜயம்.

(புத்தளம் எம்.யூ.எம்சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் இயங்கும், புத்தளம் நகரின் தமிழ் மொழி மூல முதலாவது முன்பள்ளியான ஐ. எப்.எம். முன்பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை (29) காலை புத்தளம் பொது நூலகம் மற்றும் சிறுவர் பூங்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்கள்.


முன்பள்ளி பொறுப்பாசிரியை பௌசுல் ரூசி சனூன் சகிதம் விஜயம் செய்த முன்பள்ளி சிறார்கள் புத்தளம் நகர சபையினால் நிர்வகிக்கப்படும் சிறுவர் பூங்காவில் காலை நேர இறை சிந்தனையில் லயித்திருந்து பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை காட்சிகளை பார்வையிட்டு, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களிலும் மகிழ்வோடு பங்குபற்றினர்.


பின்னர் புத்தளம் பொது நூலகத்தில் அமையப்பெற்றுள்ள சிறுவர் பகுதிக்கு விஜயம் செய்த மாணவர்கள் கலை கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் பங்கேற்றனர்.


இதன் போது நூலகத்தில் கடமையில் இருந்த ஆரிப் அஸீலா மற்றும் செவ்வந்தி ஆகியோர் மாணவர்களுக்கு கதைகள் கூறி இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தனர்.

















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال