ஜெயாபார்ம் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்ட தொடர் புத்தளத்தில் ஆரம்பம்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் உதைபந்தாட்ட லீக் புதிய உதைப்பந்தாட்ட தொடர் ஒன்றினை புத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.
"ஜெயா பார்ம் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட தொடர் 2024" என தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஜெயா பார்ம் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய நிறைவேற்று பணிப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா இத்தொடருக்கு பூரண அனுசரணை வழங்க முன் வந்துள்ளார்.
விலகல் முறையிலான இத்தொடரில் புத்தளம் உதைபந்தாட்ட லீக்கில் கட்டுப்பட்டுள்ள 12 அணிகள் பங்கேற்கின்றன. ஏ மற்றும் பீ பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 11 ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.
சகல போட்டிகளும் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் பிரதி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளன.
No comments