Breaking News

வேட்பாளராக உங்களிடம் வருவேன் விஜயதாச ராஜபக்ஷ உரை

(நமது நிருபர்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறுகிறார்.


சகல மதகுருக்களையும் சகல இனங்களையும் விழித்துப் பேசிய அவர் தேர்தல் விஞ்ஞாபனம் போன்ற நீண்ட உரையை  இன்று கொழும்பில் நிகழ்த்த நாட்டு மக்களுக்கு நிகழ்த்தி உரையாற்றினார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மக்களின் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமாக அமைந்துள்ள வரி மற்றும் சட்ட மறுசீரமைப்பு ஆகிய துறைகளில் மாற்றங்களை கொண்டு வருவேன்.


நானும் நீங்களும் எமது உயிருக்கு உயிராக அன்பு காட்டும் உயிருக்கு உயிராக மதிக்கும் இந்நாடு அரசியல் தலைக்கணத்தால் நாடு அடகு வைக்கப்பட்டதால் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இந்த அவதானம் இன்னும் தொடர்கிறது


எனவே இந்த சுயநல சந்தர்ப்பவாத தீய சக்திகளை தோற்கடித்து கடந்த காலத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாக்கும்.


எனவே இத்திருநாட்டில் வெவ்வேறாக பிரிந்து புதைக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைவரும் இணைந்து எழுந்து ஆரோக்கியமான எதிர்காலத்தை திட்டமிட்டு கட்டியெழுப்ப முயற்சி செய்வோம்.


கடந்த காலங்களில் நாட்டில் தலை விரித்தாடிய தலைக்கனம் இறுமாப்பு இலஞ்சம் ஊழல் மோசடி கமிஷன் கப்பம் மற்றும் ஆன்மீகம் சிதைக்கப்பட்ட அரசியல் பொருளாதாரம் வங்குரோத்து நிலை உரிமையாக்கப்பட்ட ஆட்சி அரசாங்கங்களையே அனுபவத்தில் கண்டோம் எனவே நாம் இழந்த உரிமைகளை ஒன்றித்து மீளப் பெற்று எமது எதிர்கால சந்ததிக்கு தாய் நாட்டை தூய்மையாக ஒப்படைக்கும் ஆரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.






No comments

note